சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக குண்டுமல்லி, முல்லை, ஜாதிமல்லி, காக்கட்டான், அரளி, சாமந்தி, சம்மங்கி உள்பட பலரக பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் பறிக்கப்படும் பூக்கள் சேலம் வ உ சி, பூ மார்க்கெட், கோவை, பெங்களூர் உள்பட பல பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் காலையில் பணி அதிகளவில் நீடிக்கிறது. இதனால் குண்டு மல்லி உள்பட பல பூக்களின் விளைச்சல் பாதித்துள்ளது. இதனால் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளன நேற்று பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி கிலோ ஆயிரம் ஆகா அதிகரித்தது, முல்லை ரூ. 700, ஜாதி மல்லி ரூ400, காக்ட்டான் ரூ. 200, கலர் காக்கட்டான் ரூ. 240, அரளி ரூ. 300, வெள்ளை அரளி ரூ. 300, மஞ்சள் அரளி ரூ. 400, செவ்வரளி ரூ. 340 என விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.