இசை, ஓவியம் உள்ளிட்ட நுண்கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் புதிய முறை அடுத்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி, "சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் முறையை கொண்டுவர எடுக்கப்பட்ட முடிவிற்கு ஐஐடி செனட், இணை சேர்க்கை வாரியம், மத்திய கல்வி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளன" என்றார்.