சேலத்தில் வரிவிதிப்பை கண்டித்து வணிகர் சங்கம் ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
கடைகள் வாடகை மீதான 18 சதவிகித வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கோட்டை மைதானத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த வரிவிதிப்பால் வாடகையில் 5 ல் ஒரு பங்கினை மாதந்தோறும் செலுத்த வேண்டியுள்ளதாக வணிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கனவே கார்ப்பரேட் நிறுவனங்களின் சில்லரை வர்த்தக நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தகம் ஆகியவற்றால் வியாபாரம் இழந்து வரும் நிலையில் கூடுதல் வரிவிதிப்பு வணிகர்களை நசுக்கும் செயல் என்று குற்றம்சாட்டி அதனை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் சொத்து வரி, குப்பைவரிகளை பன்மடங்கு உயர்த்தியுள்ள சேலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பிய வணிகர் சங்கத்தினர் உயர்த்தப்பட்ட வரிகளை ரத்த செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி