மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் ஜங்சன் முன் ஆர்ப்பாட்டம்

58பார்த்தது
வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வர வேண்டும், விவசாயிகள் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தங்கராஜ் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு திரண்டு வந்து கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் விவசாயிகள் ரெயில் மறியல் செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் சிறிது நேரம் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். விவசாயிகளின் ரெயில் மறியல் போராட்டத்தால் ஜங்ஷன் ரெயில் நிலையம் முன்பு நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி