சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (டிச., 19) பிற்பகல் 1 மணி வரை வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.