தமிழ்நாடு பிராமண சங்கம் சார்பில் ஸ்ரீனிவாச திருகல்யாண வைபவம்

62பார்த்தது
சேலம் தமிழ்நாடு பிராமண சங்கம் ஜாகீர் அம்மாபாளையம் சுப்பிரமணிய நகர் கிளை சார்பாக ஸ்ரீ ஸ்ரீனிவாச திருக்கல்யாண மகோத்சவம் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்வான சீனிவாச திரு கல்யாண வைபவம் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீ அலமேலு மங்கா சமேத ஸ்ரீனிவாச உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீஅலர்மேல் மங்கை ஸ்ரீசீனிவாச பெருமாள் திருவுருவப்படத்திற்கு பட்டாடை உடுத்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பௌர்ணமி திதி மிருகசீரிஷம் நட்சத்திரம் கூடிய சுப நேரத்தில் அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் மாங்கல்யத்தை காண்பித்து மங்கள வாத்தியம் இசைக்க மேளங்கள் முழங்க ஸ்ரீ ஸ்ரீனிவாச அலர்மேல் மங்கை தாயாருக்கு மாங்கல்ய தாரண வைபவம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்றும் பெருமாளின் பக்தி பாடல்களை பாடியும் மகிழ்ந்தனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி