31 மார்ச் 2024-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் நிலுவைத் தொகை ரூ.8,34,544 கோடியாகும். 2024-25 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.1,55,584.48 கோடி கடன் பெற்று ரூ.49,638.82 கோடியை திருப்பிச் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் விளைவாக 2025 மார்ச் 31-ம் தேதி அன்று தமிழகத்தின் நிலுவையில் உள்ள கடன் தொகை ரூ.8,33,361.80 கோடியாக இருக்கும். 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு ரூ.3,76,700.81 கோடி கடன் வாங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.