தமிழகம் முழுவதும் ரூ.177.85 கோடியில் 34 உயர்மட்ட பாலங்கள் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையில், "தமிழக அரசு மாநில நிதித்திட்டத்தின்கீழ் 2024-25 ஆம் ஆண்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பாலங்களை கட்ட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாலங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.