இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தாண்டு பெரும் எதிர்பார்ப்போடு வெளியான 'இந்தியன் 2' திரைப்படம் படுதோல்வி அடைந்ததோடு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதுகுறித்து மெளனம் காத்து வந்த ஷங்கர் தற்போது மனம் திறந்துள்ளார். "இந்தியன் 2 படத்திற்கு இவ்வளவு எதிர்மறையான விமர்சனங்களை நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய 'கேம் சேஞ்சர்' மற்றும் 'இந்தியன் 3' ஆகிய படங்களில் எனது பணி பேசப்படும் என்று நம்புகிறேன்” என்றார்.