நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் வக்ஃப் மசோதாவை நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மசோதா, நில உரிமைகள் மற்றும் சொத்து தொடர்பான முக்கிய பிரச்சினைகளை நிவர்த்தி செய்கிறது