கனமழை: அமைச்சர்களுடன் துணை முதலமைச்சர் ஆலோசனை

53பார்த்தது
கனமழை: அமைச்சர்களுடன் துணை முதலமைச்சர் ஆலோசனை
மதுரையில் கனமழை பெய்து வருவதையொட்டி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று (அக்., 26) ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகளுடன் மழை பாதிப்பு குறித்தும், மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, மதுரை ஆட்சியர் சங்கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி