ஆதாரில் தகவல்களை சில முறை மட்டுமே திருத்த முடியும். பெயரை 2 முறை மட்டுமே திருத்த முடியும். பிறந்த தேதி, வயது, பாலினம் ஆகியவற்றை ஒரு முறை மட்டுமே திருத்த முடியும். முகவரி மற்றும் செல்போன் நம்பரை எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தலாம். சில தகவல்களை வீட்டிலிருந்தே ஆதார் இணையதளம் மூலம் மாற்றிக் கொள்ளலாம். சில தகவல்களை மாற்ற ஆதார் மையங்களுக்கும் தான் செல்ல வேண்டும். சரியான ஆவணங்கள் சமர்ப்பிதால் மட்டுமே மாற்றங்கள் செய்ய இயலும்.