மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், மதுரையில் கனமழையின் காரணமாக, மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் தேவையான வசதிகளுடன் 3 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன் என கூறியுள்ளார்.