சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட பானமாக ஜப்பான் சுகாதாரத் துறையால் கொய்யா இலை தேநீர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கொய்யா இலை டீ குடிப்பது இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். கொய்யா இலைகளில் ஃப்ளவனாய்டுகள், டானின்கள், பாலிபினால்கள் போன்ற வேதிப்பொருட்கள் நீரிழிவு எதிர்ப்புப் பண்புகளை கொண்டுள்ளன. கொதிக்கும் நீரில் கொய்யா இலைகள், மஞ்சள், சுக்கு, ஏலக்காய், டீ தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டினால், ஆரோக்கியமான தேநீர் ரெடி.