
வாலிகண்டபுரத்தில் 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள கடைகளில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 47), வெற்றிவேல் (24) ஆகியோர் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வெற்றிவேலை போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.19 ஆயிரம் மதிப்பிலான 25 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் சங்கரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.