மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், 268 மனுக்கள் பெறப்பட்டன

66பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (02. 12. 2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்திடுமாறும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 268 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார். முன்னதாக வருவாய்த்துறையின் சமூகபாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு தலா ரூ. 20, 000 வீதம், மொத்தம் ரூ. 3 லட்சத்திற்கான நலிந்தோர் இயற்கை மரண உதவித்தொகைக்கான ஆணைகள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி