பெரம்பலூர் மாவட்டத்தில்
பிரசித்தி பெற்ற வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோயிலில்
சோமாவார கார்த்திகை முன்னிட்டு
"108 சங்காபிஷேகம் " ,
திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்..
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம்
வாலிகண்டபுரம் கிராமத்தில்,
அமைந்துள்ளது அருள்மிகு வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் திருக்கோயில்
பிரசித்தி பெற்ற மாவட்டத்தின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் இத்தலம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் வானர அரசரான வாலி
இவ்வூரில் உள்ள ஈசனை பூஜித்து வழிபட்டு சென்றதால் இவ்வூர் வாலிகண்டபுரம் என்று அழைக்கப்படுகிறது.
இத்திருக்கோயிலில் சோமாவாரகார்த்திகையை முன்னிட்டு
நேற்று 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 108 சங்குகளில் புனித நீர் நிரப்பபட்டு
யாக வேள்வி வளர்க்கப்பட்டு
புனித நீர் மூலவர் சுவாமிகள் மீது ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து மஹா தீபாரதனை நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்