
பெரம்பலூர்: பேருந்து சேவையை துவக்கி வைத்த அமைச்சர்
கல்லூரி மாணவிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், குன்னம் தொகுதி, வேப்பூர் ஒன்றியம், வேப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து நன்னை, மண்டபம், மாடல் ஸ்கூல் கிழுமத்தூர், கை. பெரம்பலூர், அத்தியூர் குடிகாடு, அத்தியூர், அகரம் சீகூர் வழியாக திட்டக்குடி செல்லும் மகளிர் விடியல் பயண பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் இன்று துவக்கி வைத்து அத்தியூர் வரை பேருந்தில் பயணித்தார். கிராம மக்களின் பேருந்து சேவையை அந்தந்த கிராமத்திலும் மிக எழுச்சியுடன் வரவேற்றனர். இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர், துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.