சின்னத்திரை தம்பதிகளான ஈஸ்வர் - ஜெயஸ்ரீ இடையே மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் ஈஸ்வர் தன்னை துன்புறுத்துவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் போலீஸ் புகார் தந்தார் ஜெயஸ்ரீ. பின்னர் ஈஸ்வர் கைதாகி விடுதலையானார். இந்நிலையில் தற்போது இருவருக்கும் சட்டப்படியான விவாகரத்து கிடைத்து விட்டது. ஈஸ்வர் கூறுகையில், "முறைப்படியான செட்டில்மென்ட் முடிந்து விட்டதால் நாங்கள் இருவரும் அவரவர் விருப்பப்படி வாழ்வை தீர்மானிப்போம்” என்றார்.