மருதையாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தரகோரி ஆட்சியரிடம் மனு

51பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பலர், இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அதில் கூடலூர் கிராமத்தில் இருந்து கூத்தூர் கிராமம் செல்லும் சாலையின் குறுக்கே மருதையாறு செல்வதாகவும், இந்த ஆற்றில் மழையின் போது அதிக தண்ணீர் வருவதால் பொதுமக்கள் ஆற்றை கடந்து செல்வது இயலாத காரியமாக இருப்பதாலும், கூத்தூர் கிராமத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளி, உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு சென்று வருவது, அவசர நேரங்களில் மருத்துவ சிகிச்சைக்கு அரியலூர் செல்வதற்கும் இந்த சாலையை பயன்படுத்தி வருவதாகவும், இது மட்டுமின்றி பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் நேரத்திற்கு பள்ளிக்கு சென்று வர முடியாதா சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் , மேலும் தங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமான நிலம் அனைத்தும் மருதையாற்றின் அடுத்த பகுதியில் இருப்பதால் வயலுக்கு சென்று வருவதிலும், பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் , தங்களுக்கு போர்க்கால அடிப்படையில் கூடலூர் -கூத்தூர் இடையே மருதையாற்றில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்றும், பாலம் அமைக்க வில்லை என்றால் தங்களது வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை ஆட்சியரிடம் ஒப்படைத்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி