பெரம்பலூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டி வரும் மழை

69பார்த்தது
பெரம்பலூர் விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால், இந்த ஆண்டு போதுமான பருவமழை இன்றி விவசாயிகள் தவித்தனர் , மேலும் ஆடிப்பட்டத்தில் பயிர்கள் விளைவித்த நிலையில், பயிர் விளைச்சலுக்கு போதுமான மழையின்றி தவித்து வந்தனர், இதனால் மாவட்டத்தின் முக்கிய விவசாய பயிரான, மக்காச்சோளம், வெங்காயம், பருத்தி, ஆகியவை விளைச்சல் பாதிக்கப்பட்டது, மேலும், நிலத்தடி நீர்மட்டமும் குறைய தொடங்கியது, இதில், ஐப்பசி மாதம் பருவமழை தொடங்கிய நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அவ்வப்போது மட்டும் சாரல் மழை பெய்த நிலையில், வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போன்று, நேற்று மாலை முதல் லேசாக பெய்ய தொடங்கிய மழை, இடைவிடாமல் இரவு முழுவதும் கடந்து விடிய விடிய தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டில் முடங்கினர்,
இந்த மழை பெரம்பலூர் நகர் மற்றும் மாவட்ட சுற்றுப்பகுதியான, வாலிகண்டபுரம், வேப்பந்தட்டை, பாடலூர், குன்னம், ஆகிய சுற்று பகுதியில் மழை போயிட்டு வருகிறது, இதனால், சாலை ஓரம் (ம) வயல்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பதால், நிலத்தடி நீர் உயர்ந்து தண்ணீர் கிடைக்க வாய்பாக இருக்கும் என பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகள் மற்றும் விசுவக்குடி, கொட்டரை அணையில் நீர் நிரம்பி காணப்படுகின்றன ஒரு சில ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வெளியேறிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி