பெரம்பலூர்: வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் தொடர்பாக கூட்டம்

52பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் / அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் 2025க்கான வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் (19.12.2024) நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் 2025க்கான பணியில் 5,185 இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் / அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். 

இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் கோகுல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) வைத்தியநாதன், அனைத்து வட்டாட்சியர்கள், தேர்தல் வட்டாட்சியர் அருளானந்தம், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி