பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

72பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தமிழக முதலமைச்சர் அறிவிக்கப்பட்ட "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டார அளவில் பிரதி மாதம் மூன்றாவது புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் டிசம்பர் - 2024 மாதம் மூன்றாவது புதன்கிழமை (18.12.2024) "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின்படி பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் நடத்தப்படும் முகாமானது 18.12.2024 நடைபெறும். அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் 18.12.2024 அன்று கலெக்டர் (ம) அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறவுள்ளனர். 

அதுசமயம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள், தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் வசதிகள் தொடர்பான கோரிக்கையை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி