கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

60பார்த்தது
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டை முன்னிட்டு, 26-11-2024 பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், வாசிக்க அவரைத் தொடர்ந்து அனைத்து துறை அலுவலர்களும் முகப்புரையை வாசித்தனர்.

"இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டின் இறையாண்மையும், சமூக நல சமுதாயமும், சமய சார்பின்மையும், மக்களாட்சி முறையும் அமைந்ததொரு குடியரசாக நிறுவவும், அதன் குடிமக்கள் அனைவரும் சமுதாய, பொருளியல், அரசியல், நீதி, எண்ணம், அதன் வெளியீடு, கோட்பாடு, சமய நம்பிக்கை, வழிபாடு இவற்றில் தன்னுரிமை சமுதாயப்படி நிலை, வாய்ப்பு நலம், இவற்றில் சமன்மை ஆகியவற்றை எய்திடச் செய்யவும், அவர்கள் அனைவரிடையேயும், தனிமனிதனின் மாண்பு, நாட்டு மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றை உறுதிப்படுத்தும் உடன் பிறப்புரிமையினை வளர்க்கவும், உள்ளார்ந்த உறுதியுடையவராய் நம்முடைய அரசமைப்பு பேரவையில், 1949 நவம்பர் 26-ஆம் நாளாகிய இன்று, ஈங்கிதனால், இந்த அரசமைப்பினை ஏற்று, இயற்றி நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம். " என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அனைவரும் வாசித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி