4 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்

53பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
பின்னர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ. 2, 100 மதிப்பீட்டில் பார்வையற்றோருக்கான கை கடிகாரம் மற்றும் ஊன்றுகோலையும், இராணுவத்தில் இளநிலை படை அலுவலராக பணிபுரிந்த எஸ். சங்கர் இராணுவ நடவடிக்கையில் சர்வதேச எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வீரமரணம் அடைந்ததற்காக அவரது மனைவிக்கு கருணை தொகையாக ரூ. 20, 00, 000க்கான காசோலையினையும், தோட்டக்கலைத்துறையின் வாயிலாக தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில், குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அமைப்பு அமைப்பதற்காக 02 பயனாளிகளுக்கு தலா ரூ. 87, 500 மானிய உதவித்தொகையும் என மொத்தம் 04 பயனாளிகளுக்கு ரூ. 21, 77, 000 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து296 மனுக்கள் பெறப்பட்டன.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி