பெரம்பலூர்: போட்டி தேர்வில் தேர்ச்சி பெற தாட்கோ மூலம் பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பட்டய கணக்காளர்- இடைநிலை (Chartered Accountant-Intermediate), நிறுவன செயலாளர்-இடைநிலை (Company Secretary-Intermediate), செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்- இடைநிலை (Cost and Management Accountant-Intermediate) ஆகிய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒரு வருட பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள மற்றும் ஆர்வமுள்ள மாணவர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு www. tahdco. com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.