நெல்லை மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் அருகில் 7 பேர் கொண்ட கும்பல் அண்மையில் மாயாண்டி என்ற நபரை சரமாரியாக வெட்டிக் கொன்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கைத்துப்பாக்கி, நீண்டதூரம் குறிவைத்து சுடும் துப்பாக்கிகளை வைத்திருக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.