தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கணினிகளுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் வாயிலாக பிராட்பேண்ட் இணையதள சேவை ஏற்படுத்தப்பட்டது. பிராட்பேண்ட் கட்டணத்தை பல்வேறு பள்ளிகள் முறையாக செலுத்தாததால் ரூ.1.5 கோடி நிலுவை உள்ளதாக புகார் எழுந்த நிலையில் நிலுவை கட்டணத்தை பள்ளிகள் உடனடியாக செலுத்த தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.