பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் ஜெமீன் ஆத்தூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் (27. 11. 2024) நடைபெற்றது.
இம்முகாமில் மொத்தம் 334 பயனாளிகளுக்கு ரூ. 1, 44, 44, 987 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
முன்னதாக அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் கோகுல் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திக்கேயன், தாட்கோ மேலாளர் கவியரசு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாசுதேவன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சத்தியா, ஆலத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பழனிச்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், திருமதி பிரேமலதா, ஜெமீன் ஆத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.