சாலையை சீரமைத்து தரக்கோரி கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

66பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் தேவையூர் ஊராட்சியில் சாலையை சீரமைத்து தர விட்டால் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தகவல்.

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அருகே உள்ள தேவையூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில் , தேவையூர் ஊராட்சிக்கு உட்பட்ட 10 ஆவது வார்டு பகுதி சாலையில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதாகவும், இதனால் பொதுமக்கள் அனுதினமும் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும், மேலும் தேங்கும் மழை நீர் வழிந்தோடும் வகையில் சாலையின் இரு பக்கத்திலும் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து, சாலையை உயரமாக மேம்படுத்தி தார்ச்சாலையாக செப்பனிட்டு தர வேண்டும் என்றும் இது தொடர்பாக கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருவதாகவும். இதற்கு அதிகாரிகள் செவி சாய்க்காத நிலையில் இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வந்துள்ளோம் என்று தெரிவித்தனர். தேவையூர் பொதுமக்கள் தங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி