
கேப்டன் மக்களின் மனதில் அரியாசனம் போட்டு அமர்ந்துள்ளார் - சீமான்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மாலை அணிவித்து சீமான், கட்சி நிர்வாகிகள் துரைமுருகன், மு.களஞ்சியம், இயக்குநர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் அஞ்சலி செலுத்தி, பிரேமலதா விஜயகாந்த், எல்.கே.சுதீஷுக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கேப்டன் விஜயகாந்துக்கு இருக்கும் துணிவு இங்கு யாருக்கும் இல்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களாலும் கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்டவர். மக்களின் மனங்களை வென்று அவர்களின் மனதில் அரியாசனம் போட்டு அமர்ந்துள்ளார். அவர் நல்லவர் என அடக்கி விட முடியாது, ஆகச்சிறந்த மனிதர். இவ்வாறு அவர் பேசினார்.