சென்னையில் சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சினிமா இயக்குனர் கல்லுாரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த
அஜித்குமார் (25) என்பவர் மது பிளஸ் 2 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், துணை நடிகையின் தோழியான, 19 வயது கல்லுாரி மாணவி ஒருவருடன்
அஜித்குமார் வீட்டில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது, சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி, மது போதையில் கல்லுாரி மாணவியை இரு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.