முதலமைச்சர் மு.க
ஸ்டாலின், மதவாதத்தை தவிர பாஜகவிடம் வேறு கொள்கை இல்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர், “ஆட்சிக்கு வந்தாலும், பாஜகவால் சாதனைகளை கூறி வாக்கு கேட்க முடியவில்லை. வெறுப்பு அரசியலை வைத்தே வாக்கு பெற நினைக்கிறார்கள்” எனவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், INDIA கூட்டணி குறித்து பேசிய முதல்வர் மு.க
ஸ்டாலின், மத நல்லிணக்கமே எங்கள்
வலிமை. மக்களின் பேராதரவுடன் வெற்றிபெறுவதே எங்கள் தேர்தல் உத்தி' என தெரிவித்துள்ளார்.