கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் மரணம்

40805பார்த்தது
கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் மரணம்
கலை இயக்குநர் மிலன் (54) மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். அஜித்தின் 'விடாமுயற்சி' படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றிருந்த போது திடீரென படப்பிடிப்பு தளத்திலேயே உயிரிழந்தார். 'கலாப காதலன்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான மிலன், பில்லா, வேலாயுதம், என்றென்றும் புன்னகை, ரோமியோ ஜுலியட், போகன், சாமி 2, வீரம், வேதாளம், துணிவு, கங்குவா, விடாமுயற்சி உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். 1999 இல் கலை இயக்குனர் சாபு சிரிலின் உதவியாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய மிலன், சிட்டிசன், தமிழன், ரெட், வில்லன் மற்றும் அந்நியன் உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்தி