குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கல்லூரி மாணவியை இளைஞர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள (BARC) தனது குடியிருப்பில் தங்கியிருந்த மாணவி, பக்கத்து வீட்டில் சமையல் பொருளை கடனாகப் பெற சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த
அஜித்குமார் (26), மற்றும் அவரது நண்பர் பிரபாகர் யாதவ் (30) மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இரவு முழுவதும் மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். மாணவி அளித்த புகாரின் பேரில் இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.