துப்பாக்கியை காட்டி கொள்ளை- 3 பேர் கைது!

45032பார்த்தது
துப்பாக்கியை காட்டி கொள்ளை- 3 பேர் கைது!
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று முன்தினம் மலையாண்டிபட்டினம் நால்ரோடு பகுதியில் சாமராயபட்டியில் இருந்து கேரளாவுக்கு பாக்கு காய்களை சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்த வியாபாரி முஸ்தபாவை 3 பேர் வழிமறித்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் துப்பாக்கியை காட்டி ரூ.3,000 பணம் பறித்துச் சென்றனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில், உடுமலை போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து குற்றவாளிகளான நாதன், அஜித்குமார், பாண்டி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி