நடிகர்
அஜித்குமார் ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் வீட்டில் வசித்து வருகிறார். அந்த பகுதியில் மழைநீர் சாலை விரிவாக்கம் மற்றும் வடிகால் பணிகள் நடந்துவருவதால் பலரது வீட்டின் சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அஜித் வீட்டின் சுற்றுச்சுவரை இயந்திரத்தின் மூலம் இடித்துள்ளனர். வீட்டிற்கு வெளியே பள்ளமும் தோண்டப்பட்டுள்ளதால் வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.