இந்த ஆண்டு நிறைய சினிமா பிரபலங்களுக்கு திருமணம் நடந்துள்ளதால்,
தல தீபாவளியை அவர்கள் சந்தோஷமாக கொண்டானர். அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியன், கவின்-மோனிகா, ஹரிஷ் கல்யாண்-நர்மதா உதயகுமார், அமலா பால்-கத் தேசாய் ஜோடிகள் இந்த ஆண்டு
தல தீபாவளி கொண்டாடியுள்ளனர். அதேபோல், நாஞ்சில் விஜயன் - மரியா, பாரதிகண்ணம்மா அகிலன்- அக்ஷயா, பிரியங்கா நல்காரி- ராகுல் வர்மா ஆகிய சின்னத்திரை பிரபலங்களும் இந்த ஆண்டு
தல தீபாவளி கொண்டாடினர். அவர்களது புகைப்படங்களை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு, அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.