அதிமுகவின் மறைந்த தலைவர்களான
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தாங்கள் இறக்கும் வரை மத்திர அரசிடம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கவில்லை என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா புகழாரம் சூட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "மோடியா? லேடியா? என கேட்டவர் ஜெயலலிதா. அவருடைய துணிச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு என்று வந்திருக்கிறது? கொள்கை ரீதியாக மோடியை விமர்சிக்க
துணிவு இல்லாத எடப்பாடியை பார்த்து
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஏன் அச்சப்பட போகிறோம்" என்று கூறியுள்ளார்.