மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்த நீரவ் ஷா திடீரென படப்பிடிப்பிலிருந்து விலகிக்கொண்டதாகவும் அவருக்குப் பதிலாக ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜித்தின் விருப்பமான ஒளிப்பதிவளாராக இருப்பவர் நீரவ் ஷா. கிரீடம், பில்லா, நேர்கொண்ட பார்வை,
வலிமை,
துணிவு உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்றியது குறிப்பிடத்தக்கது, ஏன் விலகினார் என்ற காரணம் தெரியவில்லை.