தமிழக அரசு தயாரிக்கும் '
வலிமை' உள்ளிட்ட சிமென்டுகளை விற்பனை செய்வதற்கான விற்பனை நிலையம் தொடங்க, தாட்கோ நிறுவனம், ரூ.2.13 லட்சம் மானியம் வழங்குகிறது. தமிழக அரசின், 'டான் செம் நிறுவனம், அரசு,
வலிமை ஆகிய பிராண்டுகளில், வெளிச்சந்தையை விட சற்று குறைந்த விலைக்கு, சிமென்ட் விற்பனை செய்கிறது. இவை, "டீலர்ஷிப் எனப்படும். விற்பனை முகவர்கள் வாயிலாக விற்கப்படுகின்றன. ஆதிதிராவிடர் தொழில் முனைவோர், அரசு சிமென்ட் நிறுவனத்தின் விற்பனை நிலையம் தொடங்க, 'தாட்கோ' எனப்படும், தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம், ரூ.2.18 லட்சம் மானியம் வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.