நடிகர்
அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக சொல்லப்பட்டது. இந்நிலையில், அந்தப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பதில், டோலிவுட் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கவுள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கின்றன. இதில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஒளிப்பதிவாளராக நீரவ் ஷாவும் இணைந்துள்ளார்களாம். இதுகுறித்து விரைவில் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கோபிசந்த் மலினேனி தெலுங்கில் கிராக், வீர சிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.