PBKS அணிக்கெதிரான போட்டியில் CSK அணி 5 விக்கெட்டை சாய்த்து மீண்டும் பழைய ஃபார்மிற்கு திரும்பியுள்ளது. சண்டிகரில் நடைபெறும் 22-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற PBKS பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, ஆரம்பம் முதல் PBKS அதிரடியாக விளையாடிய போதும், சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. தற்போது 10 ஓவர் முடிவில் அந்த அணி 94 ரன்கள் எடுத்துள்ளது. CSK தரப்பில் கலீல், அஸ்வின் தலா 2 விக்கெட்டையும் முகேஷ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.