சென்னை திரும்பினார் நடிகர் அஜித் (வீடியோ)

2535பார்த்தது
துணிவு படத்திற்கு பிறகு அஜித்குமார், மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக அஜர்பைஜானில் முகாமிட்ட படக்குழு அங்கு முக்கிய காட்சிகளை படமாக்கினர். இதையடுத்து படப்பிடிப்புக்கு சில நாட்கள் இடைவெளி விடப்பட்டதால் அஜித் சென்னைக்கு திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் இருந்த ரசிகர் ஒருவர் அஜித் நடந்து செல்வதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது வைரலாகியுள்ளது. மீண்டும் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி