எலும்பை இரும்பு போல மாற்றும் அற்புத விதைகள்
முலாம்பழ விதைகளில் வைட்டமின் ஏ, பி, சி, கே, இ போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், புரதம், துத்தநாகம் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகளும் நிறைந்து காணப்படுகிறது. இந்த விதைகளை சாதாரண அறை வெப்ப நிலையில் உலர வைத்து, ஈரப்பதம் நீங்கிய பின்னர் சமையலில் பயன்படுத்தலாம். இதில் இருக்கும் முக்கிய தாதுக்கள் ஆரோக்கியமான எலும்புகள், பற்களுக்கு உதவி புரிகின்றன. ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் உடையக்கூடிய பலவீனமான எலும்பு நிலைகளை இந்த விதைகள் தடுக்கிறது.