“தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதிப்பது, தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் செயல். இது மிகப்பெரிய பித்தலாட்டம். ஒரு பாட்டில் இருந்து 'திராவிடநல் திருநாடு' என்ற சொல்லை அகற்றி விட்டு பாடினால் திராவிடம் என்ற சொல்லே மறைந்துவிடுமா? துணிவிருந்தால் தேசிய கீதத்தில் இருந்து 'திராவிடம்' என்ற சொல்லை அகற்றி விட்டு பாடுங்கள் பார்க்கலாம். இந்தி வெறியர் வந்து தமிழை அழித்து விட முடியாது” என ஆர்.எஸ்.பாரதி, திமுக அமைப்புச் செயலாளர் கூறியுள்ளார்.