நடிகர் சல்மான் கானுக்கு மத்திய அரசு Z+ பாதுகாப்பு வழங்கியுள்ளது. தொடர் கொலை மிரட்டல்கள், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சல்மான் கானிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மர்ம நபர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். புதிய மிரட்டல் எதிரொலியால் மும்பையில் அவரது வீட்டின் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.