பூண்டினை பாலில் வேகவைத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும். கருப்பட்டியை பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவும். பின்பு கடாயில் சிறிது கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்த பூண்டு விழுது, கருப்பட்டி பாகு சேர்த்து நன்றாக கிளறவும். லேகியம் திரண்டு, ஓரங்களில் எண்ணெய் பிரிந்து, பதம் வந்த பிறகு இறக்கி பரிமாறவும். இந்த லேகியத்தை பிரசவித்த பெண்கள் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். வாய்வுத் தொல்லைகள், வயிற்றுப் பிரச்சனைகள் காணாமல் போகும்.