ஆளுநரை உடனே திரும்பப் பெற வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

54பார்த்தது
ஆளுநரை உடனே திரும்பப் பெற வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்
திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது X தள பதிவில், இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர். தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி