உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக MLA பிரஜ்பூஷன் ராஜ்புத் பெட்ரோல் பங்க் ஒன்றிற்கு பெட்ரோல் போட சென்றுள்ளார். அப்போது அங்கு பணிபுரியும் அகிலேந்திர கரே (44) என்பவர், “சமீபத்திய தேர்தலில் நான் உங்களுக்கு வாக்களித்தேன். உங்கள் வெற்றியில் எனக்கும் பங்கு உள்ளது. என் திருமணத்திற்கு நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். எனக்கு பெண் பார்க்க வேண்டும். எனக்கு மாத சம்பளம் ரூ.6000" என கூறியுள்ளார். இதனை கேட்டு திகைப்படைந்த MLA, "ஏற்பாடு செய்கிறேன்" என கூறியுள்ளார்.